Annaththe | தீபாவளி அன்று ரிலீஸ் ஆனா அண்ணாத்த படம் இரண்டு ஓடிடி தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் அண்ணாத்த. முழுக்க முழுக்க செண்டிமெண்ட் படமாக உருவாகியுள்ள இதில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி ,பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே களமிறங்கி இருந்தது. கொரோனா ஊரடங்கு, படக்குழுவினருக்கு கொரோனா தொற்று என தாமதமான "அண்ணாத்த" சன் பிக்சர்ஸின் பிளான் படி தீபாவளி வெடியாக ரிலீசானது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ. 150 கோடி வசூலை தாண்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கிடையே அண்ணாத்த படம் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்த வசூலைகொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. அண்ணன் தங்கை பாசக்கதைக்களத்தைக் கொண்ட ‘அண்ணாத்த’ இதுவரை 200 கோடிக்குமேல் உலகம் முழுக்க வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப்பிறகான டிஜிட்டல் உரிமையை படத்தை தயாரித்த சன் நெக்ஸ்ட் நிறுவனமும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. அதன்படி 20 நாட்கள் கழித்து இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ‘அண்ணாத்த’ வெளியாகியிருக்கிறது.

ரசிகர்கள் போதிய ஆதரவு கிடைக்காத காரணத்தால் தான் அண்ணாத்த குறுகிய காலத்திலேயே இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த சிம்புவின் மாநாடு படமும் இன்று தான் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவும் ரஜினி படம் விரைவில் ஓடிடிக்கு போக ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.