Asianet News TamilAsianet News Tamil

கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் உருவாகியுள்ள 'அனபெல் சேதுபதி' படத்தின் ட்ரைலர் வெளியானது..!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'அனபெல் சேதுபதி' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது .
 

annabelle sethupathi movie trailer released
Author
Chennai, First Published Aug 30, 2021, 7:19 PM IST

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'அனபெல் சேதுபதி' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது .

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்காமல், தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வருபவர் விஜய் சேதுபதி. எனவே இவர் நடிக்கும் படங்கள் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே தனி எதிர்பார்ப்பு உண்டு. அதே போல், திரையுலகத்தில் ஒரு நிலையை இடத்தை அடைந்து விட்டால், இப்படித்தான் நடிப்பேன், இப்படி தான் இருப்பேன், என பில்ட் அப் பண்ணும் பிரபலங்கள் மத்தியில் ஒரு சாதாரண மனிதராக எப்போதும் போல் இருப்பது இவருடைய இயல்பான குணம் என்றே கூறலாம்.

annabelle sethupathi movie trailer released

தன்னுடைய நண்பர்களுக்காக சில படங்களில் சம்பளமே வாங்காமல் நடித்தும் கொடுப்பவர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'லாபம்' படம் திரையரங்கில் வெளியாக உள்ள வெளியான நிலையில், இவர் நடித்து முடித்துள்ள மற்றொரு திரைப்படமான 'அனபெல் சேதுபதி' திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்தது.

annabelle sethupathi movie trailer released

அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் என்பவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள பீரியட் திரைப்படம் 'அனபெல் சேதுபதி'. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் இவருக்கு நாயகியாக நடித்துள்ள டாப்ஸி இருவருமே... இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். கலகலப்பான திகில் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. 

annabelle sethupathi movie trailer released

இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி, ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலரை சற்று முன்னர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல், ஒரு அரண்மனைக்குள்ளேயே நடக்கும், திகில் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.இந்த படத்தின் ட்ரைலரை சற்று முன்னர் நடிகர் சூர்யா வெளியிட்டார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios