Asianet News TamilAsianet News Tamil

'அண்ணாத்த' படப்பிடிப்பிற்காக சற்று முன் ஹைதராபாத் பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

மார்ச் மாதம் 15 ஆம் தேதி சென்னையில் மீண்டும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு துவங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டார்.
 

annaatthe movie shooting again started in Hyderabad
Author
Chennai, First Published Apr 8, 2021, 10:51 AM IST

மார்ச் மாதம் 15 ஆம் தேதி சென்னையில் மீண்டும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு துவங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.  கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.

annaatthe movie shooting again started in Hyderabad

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஓட்டுமொத்த படக்குழுவும் பயோபபுளுக்குள் இருந்த நிலையில், தொற்று பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது. 

annaatthe movie shooting again started in Hyderabad

இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை ன்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ரஜினிகாந்தின் உடல் சீராக உள்ளதை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன், இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ, மற்றும் மருமகன் தனுஷ் கட்ட உள்ள புதிய வீட்டின் பூமி பூஜையில் கலந்து கொண்டார். 

annaatthe movie shooting again started in Hyderabad

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதி, சென்னையில் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு துவங்கி. 20  நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்த நிலையில், மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் படி இன்று சற்று முன்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹைதராபாத்துக்கு பறந்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios