anjana tweet for kayal chandran kiss

கயல் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சந்திரன், படங்களை மிகவும் தெளிவாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்துள்ள, பார்ட்டி படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இயக்குனர் வெங்கட் பிரபு படம் என்றால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அதற்கேற்றதுபோல்... டான்ஸ், பார்ட்டி, கிளாமர், காமெடி என ட்ரைலர் தூள் கிளப்பி இருந்தது.

இதில் நடிகை நிவேதா பெத்துராஜ், கயல் சந்திரனுக்கு லிப் டு லிப் கிஸ் அடிப்பது போல் ஒரு சீன் வந்தது. இதனை பார்த்த அஞ்சனாவின் ரசிகர்கள் பலர் அவரை ட்விட்டரில் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளனர். 

இதற்கு அஞ்சனா... சிரித்துக்கொண்டு, யோவ் சக்களத்தி வச்சிகிற அளவுக்கு எம் புருஷன் வொர்த் இல்லன்னு கலகலப்பாகக் கூறி.. ஃபீலிங் ஸ்மைலீ ஒன்றையும் போட்டுள்ளார்.

Scroll to load tweet…