anjali sister controvecy talk

கற்றது தமிழ், அங்காடித் தெரு என கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்தெடுத்து நடித்து, தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த திரையுலகினரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை அஞ்சலி.

இவர் திரையுலகில் காலடி எடுத்து வைக்க உறுதுணையாக இருந்தவர். இவருடைய சித்தி பாரதி. ஆனால் அஞ்சலியின் காதல் விவகாரம் பிடிக்காமல் இருவருக்கும் இடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. தற்போது அஞ்சலி அவருடைய சித்தியிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருடைய சித்தி பாரதி அவருடைய சொந்த மகளை சினிமாவில் நடிகையாக களமிறக்கியுள்ளாராம். மேலும் இவர் அஞ்சலியின் தங்கை என்று பலரிடம் கூறி அறிமுகப்படுத்திக் கொள்வதை அறிந்த அஞ்சலி தனக்கு தங்கையெல்லாம் இல்லை என மறுத்து வருவதாகத் தெரிகிறது. 

இதனைக் கேள்விப்பட்ட பாரதியின் மகள், அஞ்சலி தன்னுடைய அக்கா தான். அவர் மறுத்துப் பேசினால் உறவு விட்டு விடுமா? அல்லது அவர் கூறுவது உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியுமா என மனவருத்தத்துடன் கூறியுள்ளார்.