நேற்றைய தினம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் ஸ்ட்ரோங் போட்டியாளராக பார்க்கப்பட்ட சனம் ஷெட்டி வெளியேறினார். இவரது வெளியேற்றம், வீட்டின் உள்ளே இருப்பவர்கள் மட்டும் இன்றி, வெளியில் உள்ள அவரது ரசிகர்களையும் அதிருப்தியடைய செய்தது.

கடந்த வாரம் ரமேஷ் கேப்டனாக இருந்த நிலையில், இந்த வார கேப்டனை தேர்வு செய்ய அனைத்து போட்டியாளாரர்களையும் கேப்டன் டாஸ்கில் பங்கேற்க செய்துள்ளார் பிக்பாஸ். மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் யார், வெற்றி வாகை சூடி இந்த வார கேப்டனாக தேர்வானார் என்பது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த முறை நடைபெற்றுள்ள தலைவர் போட்டிக்கான டாஸ்க் மிகவும் வித்தியாசமாக உள்ளது. அணைத்து போட்டியாளர்களும் பங்கேற்ற இந்த டாஸ்கின் இறுதியில் அனிதா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு கேப்டனாகிறார். 

அனிதா கேப்டன் பதவியை ஏற்பது பலருக்கு பிடிக்கவில்லை என்பது சிலர் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. எனவே அர்ச்சனா... ஆரி ஆகியோர் அதிருப்தியுடன் இந்த முடிவை ஏற்று கொண்டதையும் பார்க்கமுடிகிறது.

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...