anitha rathinam talk about ishwarya dhanush dance
கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா மகளிர் தினத்தன்று ஐ,நா. சபையில் தன்னுடைய பரதநாட்டியம் நிகழ்ச்சியை அரகேற்றி இருந்தார்.
அவரின் அந்த நடனத்தில் ஒரு பகுதி சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. ஒரு சிலர் அவருடைய நடனத்தை பாராட்டி வந்தாலும் பரதநாட்டியத்தை பற்றி முழுமையாக அறிந்த சிலர் மோசமாக கிண்டலடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பரதநாட்டியக் கலைஞரான அனிதா ரத்னம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியமல்ல. பரத நாட்டியம் இன்று எந்த அளவுக்கு பரிதாப நாட்டியமாகிவிட்டது என்பதை அவர் ஆடிய நடனம் காட்டுகிறது என்று கூறியிருந்தார்.
பலர் அவர் ரஜினியின் மகள் என்கிற காரணத்தால் அவர் ஆடிய நடனத்தை குறை சொல்லாமல் மௌனம் சாதித்த வேளையில், முதல் முறையாக துணிச்சலாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
