anitha movie music director announced

தமிழகத்தில் திணிக்கப்பட்ட நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயிரிழிந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதாவின் வாழ்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் அனிதாவின் கதாப்பாத்திரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி அனிதா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது இந்த படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

அது என்னவென்றால்... தமிழ் மற்றும் பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பாடல்களை பாடிய பி.சுசீலா தான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளாராம்.

இவர் முதல் முதலாக இசையமைப்பது குறித்து பி.சுசீலா கூறுகையில், 'இசையமைப்பதில் தனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. படக்குழுவினர் வற்புறுத்தியதாலும், படத்தின் கதை மனதிற்கு நெருக்கமாக அமைந்ததாலும் இசையமைக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார். இந்த படத்தை எஸ்.அஜய் என்பவர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.