பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் செண்டிமெண்ட் சீன்ஸ் தூள் பறக்கிறது. நேற்றைய தினம் கூட அர்ச்சனா, பாலாவை பார்த்து "நான் தேடி கொண்டிருக்கும் ஒரு குழந்தையை உன்னிடம் பார்க்கிறேன். நீ வேண்டாம் என்றால் நான் எங்கடா போவேன். நீ எனக்கு பிள்ளையாக வேண்டும் என அவரை கட்டி அணைத்து அழுதார். பாலாவும் தனக்கு இது புதிதாக உள்ளது என கூறி, அர்ச்சனாவின் பாசத்திற்கு மரியாதை கொடுத்ததை பார்க்க முடிந்தது.

இந்நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு கொடுத்த டாஸ்க் மூலம் அனைவருமே அழுது விடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.  ’நீங்கா நினைவுகள்’ என்ற டாஸ்க்கில் யார் யாரை எல்லாம் நீங்கள் மிஸ் செய்கிறீர்கள் என்பது குறித்து அவரவரது அனுபவத்தை சொல்ல வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார்.

முதல் புரோமோவிலேயே...  ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி,  ஆகியோர் தங்களுடைய குடும்பத்தினரை நினைத்து அழுததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரமோவில், அனிதா மிகவும் எமோஷனலாக தான் மிஸ் பண்ணும் நபர் கணவர் பிரபா மட்டும் தான். என் தந்தையை நான் தொட்டு பார்த்தது கூட இல்லை. ஆண்களிடம் இருந்து கிடைக்கும் பாசம் பற்றி கணவரிடம் தான் பெற்றேன் என நீளமாக ஒரு கதையை கூறுகிறார் என தெரிகிறது.

இதை பார்த்து, திடீர் என... சம்யுக்தா பேசுவதற்கு மன்னிக்கவும்... இது ரொம்ப பெருசா போகிறது என கூறுகிறார். பின்னர் ரம்யா பாண்டியன் ஆஜித் ஆகியோர் சிரிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. நினைத்ததை கூட பேசாமல் போட்டியாளர்கள் தடுப்பதால் , எனவே போட்டியாளர்கள் அனிதாவை கார்னர் செய்கிறார்களோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள பரபரப்பான புரோமோ இதோ...