நன்றாக படித்தால் தான், மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்கிற ஆசையில், இரவு பகல் பாராமல், +2  வில் ஊரே மெச்சும் அளவிற்கு 1176 மதிப்பெண்களை எடுத்து மருத்துவராகவேண்டும் என்கிற கனவோடு வெளியே வந்தார் அனிதா. ஆனால் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மருத்துவப்படிப்பு என்று கூறி பல மாணவிகளின் கனவை கானல் நீராக மாற்றியது மத்தியஅரசு.

இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாமல் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என கூறி, நீதிமன்றம் வரை சென்று தோல்வியடைந்ததால் மாணவி அனிதா, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இவருடைய மரணத்திற்கு மாணவ மாணவிகள், பொதுமக்கள், அரசியல் வாதிகள், மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் விவேகா,  தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்  மருத்துவ முத்தம் இருக்கட்டும், இந்த மருத்துவ யுத்தத்தை கையில் எடுப்போம்  என பதிவு செய்துள்ளார்.