இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், வரும் 9 ஆம் தேதி பொங்கல் திருவிழா ஸ்பெஷலாக  ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம், 'தர்பார்'. 

படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகள், விண்ணை தொடும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. அதாவது பிளைட்டில் கூட, தர்பார் பட புரோமோசின், பறந்து கொண்டிருக்கிறது.

மேலும், இப்படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையில் இடம்பெற்றுள்ள அணைத்து பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், தர்பார் படத்தின் இசை பணிகளில், வாக்குறுதியை மீறி விட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார் தமிழக இசை கலைஞர்கள் சங்க தலைவர் தீனா.

இதுகுறித்து கூறியுள்ள அவர்... தர்பார் படத்தில் தமிழக இசைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும்,  ஹாலிவுட் கலைஞர்களை வைத்து இசை அமைத்ததாக அனிரூத் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அனிரூத் தமிழக கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும் என கூறிய வாக்குறுதியை மீறி விட்டதாக தீனா தெரிவித்துள்ளார். மேலும்
தமிழக கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.