'மாஸ்டர்' படத்தில் இயக்குனர் அனிருத் இசையமைத்துள்ள வாத்தி கம்மிங் பாடலை முதல் முறையாக கம்போஸ் செய்து முடித்ததும், குழுவினருடன் உற்சாக நடனமாடிய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

தளபதி விஜய்யை வைத்து, 'கைதி' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ’மாஸ்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து, ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக, மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முற்றிலும் முடக்கப்பட்டது.

அதில், தளபதியின் 'மாஸ்டர்' படமும் தப்பவில்லை. இதன் காரணமாக விறுவிறுப்பாக நடந்து வந்த 'மாஸ்டர்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில்  போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்க அரசு அனுமதி கொடுத்ததால், அணைத்து பணிகளும் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆனால் தொடர்ந்து கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருவதாலும், இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வருவதாலும் எப்போது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

எனினும், 'மாஸ்டர்' படம் குறித்து அவ்வப்போது... சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை முதல் முறையாக ரெகார்ட் செய்து முடித்த உடன், இசையமைப்பாளர் தன்னுடைய குழுவினருடன் கேட்டு... வெறித்தனமாக ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.