aniruth about nayanthara personal character
கோலிவுட் திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளாக அசைக்க முடியாத கதாநாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் எது செய்தாலும் அதனை ரசிகர்கள், அன்று முதல் இன்று வரை ரசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில், இவரை பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு சில விஷயங்களை இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
அனிருத், ஏற்க்கனவே நடிகை நயன்தாரா நடித்து மிகப்பெரிய ஹிட் ஆன, 'நானும் ரௌடிதான்' படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது 'கோலமாவு கோகிலா' படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா பற்றி அனிருத் கூறுகையில்... "பெர்சனலா அவங்க ரொம்ப நல்ல கேரக்டர். நல்ல மனுஷி. ப்ரியமா இருப்பாங்க. அவங்களுக்கு என் மியூசிக் ரொம்பப் பிடிக்கும். ‘நான் உங்க பெரிய ஃபேன்’னு மெசேஜ் அனுப்புவாங்க. சமயங்கள்ல விருந்து லெவல்ல சாப்பாடு சமைச்சு அனுப்புவாங்க," என்று கூறியுள்ளார். 
மேலும் தங்களை மிகவும் நெருக்கமாக்கியது... நானும் ரௌடிதான் என்று தெரிவித்துள்ளார்.
