தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ்  நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ், அனிருத், சாந்தனு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கத்தி படத்திற்கு பிறகு விஜய் உடன் மீண்டும் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். அவரது இசையில் ஏற்கனவே வெளியான  குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் ஆகிய இரண்டு பாடல்கள் சோசியல் மீடியாவை கலக்கு கலக்கியது. 

இசை வெளியட்டு விழாவில் பங்கேற்ற அனிருத் மேடையில் குட்டி ஸ்டோரி பாடலை பாடி அசத்தினார். அதன் பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். அதையடுத்து மாஸ்டர் படம் குறித்து அவர் வெளியிட்ட மாஸ் தகவல் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்ட் இன்று வெளியாகியுள்ளது அதில் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் மேடையில் பேசிய அனிருத், படத்தில் 12 பாடல்கள் உள்ளதாகவும், 8 பாடல்கள் இன்று வெளியாக உள்ள நிலையில் மீதமுள்ள 4 பாடல் விரைவில் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாகவும் அறிவித்தார்.