Anirudh who became a girl for Nayantara! Fans shock
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்று செல்லமாக அழைப்பார்கள் ஏற்கனவே சில ஆல்பங்களிலும், படங்களிலும் தலைகாட்டியிருக்கிறார். இந்நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் “கோலமாவு கோகிலா” படத்திற்காக அனிருத் லேடி கெட்டப் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றுதான் “கோலமாவு கோகிலா”. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது.

இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் அனிருத் நடிக்கவிருக்கிறார். அதில் நயன்தாராவிற்கு ஜோடியாக வருவது போல் இருக்குமாம். தன்னை விட 10 வயது குறைவான அனிருத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இப்படி சொல்லும் இந்த நேரத்தில் பெண் வேடம் போட்டது எல்லொரையும் ஆச்சிரியதில் ஆழ்த்தியுள்ளது.
