ரிலீஸுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் சென்சாரில் ஏ’ சர்டிபிகேட் வாங்கிய ‘வடசென்னை’ படம் குறித்து ஏ’கப்பட்ட கிசுகிசுக்கள் நடமாட ஆரம்பித்திருக்கின்றன.

துவக்கத்தில் கெட்டவார்த்தை வசனங்கள், அளவுக்கு மீறிய ரத்தக்களறி காட்சிகளைக் கண்டு வெகுண்ட சென்சார்போர்டு மெம்பர்கள் ஏகப்பட்ட கட்டுகள் கொடுக்கமுடிவு செய்ததைத் தொடர்ந்து அதைச் சரிக்கட்டும் முயற்சியில் நாயகன் தனுஷ் இறக்கிவிடப்பட்டாராம். டீல் ஓகே.

தற்போதைய நிலவரப்படி, நடிகை ஆண்ட்ரியா ஒரு பாடல் உட்பட பல காட்சிகளில் மேலாடை இன்றி தரிசனம் தருகிறார்.

ஆண்ட்ரியாவின் அரை நிர்வாணக் காட்சி, கமலை சவாலுக்கு இழுக்கும் தனுஷ்-ஐஸ்வர்யா ராஜேஷின் அழுத்தமான லிப் லாக் காட்சிகள், கெட்டவார்த்தைகள், ரத்தவாடை வீசும் கொலைகள் என்று படு ராவாக இருக்கிறதாம் படம். இதுவரை ரசனையான இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றிமாறன் தடம் மாறிப்போனாரா என்று 17ம் தேதி பார்க்கலாம்.