Asianet News TamilAsianet News Tamil

பாலிவுட் திரையுலகை கதற வைத்த அட்லீயின் 'அந்தகாரம்' ஓடிடியில் ரிலீஸ்..?

அந்தகாரம் படத்தின் அணைத்து பணிகளும் நிறைவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தீவிரமாக பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

andhaghaaram movie release in ott
Author
Chennai, First Published Sep 2, 2020, 3:36 PM IST

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் என முதல் படத்திலேயே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ராஜா, ராணி என்ற படத்தை இயக்கினார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட், கோலிவுட்டின் செல்லப்பிள்ளையாக வலம் வர ஆரம்பித்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என தளபதி விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குநராக உயர்ந்தார். 

andhaghaaram movie release in ott

இதற்கு முன்பே இயக்குநராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த அட்லீ,  2017ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான “சங்கிலி புங்கிலி கதவ தொற” என்ற படத்தை தயாரித்திருந்தார். மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள அட்லீ, தனது ஏ ஃபார்  ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து  “அந்தகாரம்” என்ற படத்தை தயாரிக்க உள்ளார்.  

இதில் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ள, நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.  வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ளனர். விக்னராஜன் என்பவர் இயக்கி உள்ளார். 

andhaghaaram movie release in ott

இந்த படத்தின் டிரைலர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வருடம் வெளியான போது, ஒரே நாளில்  4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து, யூ-டியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது. அந்தகாரம் படத்தின் டிரெய்லரை பார்த்த பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான கரண் ஜோகர் அட்லீக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்தகாரம் படத்தின் அணைத்து பணிகளும் நிறைவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தீவிரமாக பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios