anchor divya dharshini shocking photo

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி, தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த புகைப்படத்தில் மிக மிக அழகாக காட்சியளிக்கிறார் என்பதால் ஏற்பட்ட அதிர்ச்சி தான் இது.

கடந்த இரண்டு வருடத்திற்கு முன், தன்னுடைய நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட டிடி, ஒரு வருடத்திலேயே அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று பிரிந்தார்.

இதை தொடர்ந்து சில காலம், டிவி நிகழ்சிகளுக்கு இடைவெளி விட்ட இவர், நடிகர் தனுஷ் முதல்முதலாக இயக்கிய, ப பாண்டி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். பின் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். 

சமீபத்தில் இவர் இயக்குனர் கெளதம் மேனன் தயாரிப்பில், ஒரு ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

சமீப காலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு விமர்சனங்களை சந்தித்து வரும் டிடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல கமெண்ட்ஸ் கிடைத்து வருகிறது. அசப்பில் தேவதை போல இருக்குறீங்க டிடி என பலர் இவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

அந்த புகைப்படம் இதோ...