விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது 'டிடி' தான். இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும்.

15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் காட்டும் கவர்ச்சியின் அளவும் அதிகரித்து கொண்டே போகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், டிடி-யில் வெளியில் எங்கும் ஷூட்டிங் செல்லாமல் உள்ளார். கலகலப்பாக அங்கும், இங்கும் ஓயாமல் பிஸியாக இயங்கி கொண்டிருந்த இவரால் வீட்டில் ஒரே இடத்தில் இருக்க முடியவில்லை போல.

அதனால் வீட்டிலிருந்தபடி, குட்டையான கவர்ச்சி உடை அணிந்த படி செல்பி புகைப்படத்தை பதிவிட்டு சும்மா இருக்கும் ரசிகர்களை உசுப்பேத்தியுள்ளார்.  அந்த புகைப்படத்தில், ”Nothingggg jus a selfie, bored selfie” என பதிவிட்டுள்ளார். 

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Nothingggg jus a selfie , bored selfie 😍

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on Mar 27, 2020 at 11:13am PDT