தொகுப்பாளினி டிடி:

வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் தொகுப்பாளினி டிடி. இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் இவர் செல்லும் இடங்களில் கண்டிப்பாக இவரை பார்க்க ரசிகர்கள் கூடி விடுவார்கள். 

இதன் காரணமாக பல சமயம் தனக்கு பிடித்த இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்துள்ளதாக டிடி ஒரு பேட்டியில் கூட கூறியுள்ளார். 

டிடி செய்த வேலை:

ரசிகர்களிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க டிடி தான் ஒரு பிரபலம் என்கிற அடையாளத்தை மறைத்து ஷாப்பிங் செய்துள்ளார். அண்மையில் இவர் ஷாப்பிங் செய்ய பிரபல வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அப்போது தன்னை யாரும் கண்டு பிடித்து விட கூடாது என்பதற்காக முகத்தை மறைக்கும் படி உடை அணிந்து ஷோபிங் செய்துள்ளார். 

வெளிநாட்டிற்கு பறக்கும் நடிகைகள்:

இந்த காரணத்தினால் தான் பிரபலங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கூட வெளிநாட்டிற்கு சென்று வாங்கின்றனர். காரணம் இவர்கள் அங்கு சுதந்திரமாக சென்றால் கூட இவர்களை யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் டிடி இப்படி பார்சஸ் செய்துள்ளது அவர் எந்த அளவிற்கு சுதந்திரம் இல்லாமல் வெளியுலகில் நடமாடுகிறார் என்பதை காட்டுக்கிறது.