anchor dd put bridal wear in fashion show
சின்னத்திரை தொகுப்பாளிகளில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. இவரின் கலகலப்பான பேச்சுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
திருமணத்திற்கு முன்பு சின்னத்திரையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது வெள்ளி திரையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 
மேலும் அவ்வப்போது... ஃபேஷன் ஷோ, ராம்ப் வாக், போட்டோ ஷூட், ஆல்பம் பாடல்கள் உள்ளிடவைகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதேபோல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுக்கிறார்.
சமீப காலமாக முன்பை விட டிடி சற்று அதிகமாகவே கவர்ச்சி காட்டி வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், டிடி தற்போது ட்விட்டர் பக்கத்தில் திருமண உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
இந்த புகைப்படம் "ப்ரோவோகே சம்மர் ஃபேஷன் ஷோவில்" கலந்துக்கொண்ட போது 'திருமண உடையில் எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இதோ...
