தொகுப்பாளினி டிடி, நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் அழகிற்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் இவர் எங்கு சென்றாலும், அவர் மீது தங்களுடைய அன்பை பொழிந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

அந்த வகையில், கடந்த சில வாரங்களாக டிடி தன்னுடைய குடும்பத்துடன் சுற்றுலா சென்று, செம்ம ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார். சமீபத்தில் கூட, ஐரோப்பா நாட்டிற்கு சென்ற போது, எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் போஸ்ட் செய்திருந்தார். பிகினி உடையில் இவர், நீச்சல் குளத்தில் அடித்த கூத்துக்களின் புகைப்படங்கள் வைரலாக பரவியது.

இதே போல் டிடி இலங்கைக்கு சென்ற போது, டிடியை பார்த்த சந்தோஷத்தில் ஒரு ரசிகை அவரை கட்டி பிடித்து அழுத சம்பவம் நடந்துள்ளது. பின் டிடி ஒரு வழியாக அவரை தேற்றி, கலங்கிய கண்களை துடைத்து விட்டு தேற்றியுள்ளார்.

இந்த ரசிகையில் அன்பை நேரில் பார்த்த டிடியோ, செம்ம ஷாக் ஆகிவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். தற்போது இது குறித்த, ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

 

View this post on Instagram

PRICELESS EMOTIONS #srilanka2020

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on Jan 7, 2020 at 6:31am PST