கோலிசோடா பாண்டியின் விதவிதமான காஸ்ட்யூமில் பார்த்தபிறகுதான் அவருடன் நடிக்க சம்மதம் தெரிவிதார் நடிகை ஆனந்தி என்று இயக்குனர் ஜெகன்நாத் கூறியுள்ளார்.

இயக்குனர் ஜெகன்நாத் விஜய்யை வைத்து ‘புதிய கீதை’ படத்தை இயக்கியுள்ளார். மேலும் ‘கோடம்பாக்கம்’, அடுத்ததாக நடிகர் சேரனை வைத்து ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இவர் இயக்கிய வரும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ படத்தின் ஹீரோவாக கோலி சோடா பாண்டி நடிக்கிறார். படத்தின் ஹீரோயினியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார்.

இதுகுறித்து இயக்குனர் ஜெகன்நாத் கூறியது:

“‘‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்கிற படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது. சுமாரான பையன் சூப்பரான ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் செண்டிமெண்டாக நினைக்கும் செருப்பு காணாமல் போகிறது. அதை தேடி காதலன் செல்கிறான். அப்படி செல்லும்போது அவனுக்கு பல புதிய அனுபவங்கள் கிடைக்கிறது.

இந்தப் படத்திற்காக 100 பேருரிடம் ஆடிசன் நடத்தியதில் பாண்டி மட்டும் செலக்ட் ஆனார். ஆனால் ஹீரோயின் அழகாக இருக்க வேண்டும் என்பதால் ஆனந்தியை தேர்வு செய்தோம்.

ஹீரோ பாண்டி என்றதும் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி அய்யய்போ அந்த கருப்பு காமெடி பையனா என்று அதிர்ந்தார். அவர் ‘பசங்க’ படத்தில் பாண்டியின் தோற்றத்தை நினைத்து மறுத்தார்.

உடனே நான் பாண்டியை அழைத்துக் கொண்டு ஸ்டூடியோவுக்கு சென்று தனி போட்டோ ஷூட் நடத்தினேன். விதவிதமான காஸ்ட்யூமில் படம் எடுத்து ஆனந்தியிடம் காட்டினேன். அவரா இவர்னு ஆச்சர்யப்பட்டவர் அதன் பிறகு நடிக்க சம்மதித்தார் என்கிறார் இயக்குனர் ஜெகன்நாத்.