இவர் வெளியேறுவதற்கு முக்கிய காரணம், மிகவும் அமைதியாகவே இருந்தது தான். மேலும் கடந்த வாரமே நான் வெளியேற்றப்பட்டால் மிகவும் சந்தோஷப்படுவேன் என கூறினார். இதனால் இந்த வாரம் இவர் பெயர் நாமிடேட் செய்யப்பட்ட போது மற்ற போட்டியாளர்களுக்கு வந்த வாக்குகளை விட குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.

ஆனந்த், வைத்தியநாதன் வெளியில் போவதை அறிந்து, பிக்பாஸ் வீட்டில் இருத்த பிரபலங்கள் இவரை கண்ணீரோடு வழியனுப்பி வைத்தனர். 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவருக்கு, கமல் ஒரு டாஸ்க் கொடுத்தார். ஒரு அட்டையில் அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தது. 

அவர்கள் அனைவருக்கும் என்ன பெயர் வைப்பீர்கள் என கேட்டு அந்த பெயரை அவரையே எழுத சொன்னார். 

இதற்கு ஆனந்த் முதலில் பிக்பாஸ் வீட்டில் மிகவும் அழகு என்றால் அது யாஷிகா தான் என கூறி அவருக்கு அழகு என்று பெயர் வைத்தார். இதைத்தொடர்ந்து பாலாஜி இருக்கும் இடம் சிரிப்பு சத்தத்துடன் தான் இருக்கும் என கூறி அவருக்கு சிரிப்பு என பெயர் வைத்தார். 

பாடகி ரம்யாவுக்கு பக்குவம் என்றும், ரித்விகாவை தன்னால் இது வரை புரிந்துக்கொள்ள முடியவில்லை அதனால் அவருக்கு புதிர் என்றும் பெயர் சூட்டினார். நடிகை மும்தாஜ் யார்? எப்படி பட்டவர் என புரிந்து, பழகுவார் அதனால் அவருக்கு கவனம் என பெயர் சூட்டுவதாக தெரிவித்தார்.

 

நடிகை ஜனனிக்கு கண்கள் என்றும் வைஷ்ணவி குழப்பம் என்றும், டானியலுக்கு  புத்தி என்றும் பெயர் வைத்தார். இதைதொடந்து  ஐஸ்வர்யா குழந்தை தனமாக இருந்தாலும் அவருக்குள் ஒரு தாயுள்ளம் இருக்கிறது என கூறி அவருக்கு தாய் என்று பெயர் வைப்பதாக கூறினார். இவரை தொடர்ந்து ஷாரிக் இன்னும் அவருடைய அம்மா பாசத்தில் இருந்து வெளியே வரவில்லை என்றும்  குழந்தையாகவே இருப்பதாக கூறி குழந்தை என பெயர் வைத்தார்.

பின் நடிகர் பொன்னம்பலத்திற்கு திறமை என்றும் சென்ராயன் அவருடைய பழமையான ஊர் பழக்கங்களை இதுவரை கைவிடாமல் உள்ளார் என அவருக்கு வேர் என பெயர் வைத்தார்.

பாலாஜியின் மனைவி நித்யா எப்படியும் வளர வேண்டும் என்பதை மட்டுமே தன்னுடைய கவனத்தில் வைத்துள்ளார் என கூறி வளர்ச்சி என்று பெயர் வைப்பதாகவும், மஹத் மிகவும் நல்லவர் என கூறி அவருக்கு பித்தன் என பெயர் வைத்தார். கடைசியாக அவருடைய புகைப்படத்தின் முன் நின்று இந்த மனுஷனுக்கு காதல் தான் எல்லாம் என கூறு அவருக்கு காதல் என பெயர் வைத்துக்கொண்டார்.