Asianet News TamilAsianet News Tamil

ராஜமவுலியின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட பாகிஸ்தான் ! ஆனந்த் மஹிந்திராவால் வெளிவந்த உண்மை

ஆனந்த் மஹிந்திரா கொடுத்த ஐடியாவுக்கு இயக்குனர் ராஜமவுலி பதிலளித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

Anand mahindra request rajamouli to do movie on indus valley RRR director replied
Author
First Published Apr 30, 2023, 10:43 AM IST | Last Updated Apr 30, 2023, 10:43 AM IST

மாவீரா, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கி உலகளவில் பேமஸ் ஆனவர் ராஜமவுலி. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்தது. இதனால் மிகுந்த உற்சாகம் அடைந்த ராஜமவுலி தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ராஜமவுலி அடுத்ததாக இயக்கும் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார்.

சரித்திர படங்களை இயக்குவதில் ராஜமவுலி கைதேர்ந்தவர் என்பதால், அவருக்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டுவிட்டர் வாயிலாக ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். டுவிட்டரி சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்திருந்த ஆனந்த் மஹிந்திரா, வரலாற்றை உயிர்ப்பிக்கும் மற்றும் நம் கற்பனையைத் தூண்டும் அற்புதமான எடுத்துக்காட்டுகள் இவை என குறிப்பிட்டதோடு, இந்த பழங்கால நாகரிகத்தைப் பற்றி இயக்குனர் ராஜமவுலி படம் எடுத்தால், அது உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என ஐடியா கொடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்... கல்கியே கன்பியூஸ் ஆகும் அளவுக்கு.. பொன்னியின் செல்வனில் இத்தனை மாற்றங்கள் செய்துள்ளாரா மணிரத்னம்? முழு விவரம்

இதற்கு இயக்குனர் ராஜமவுலியும் ரிப்ளை செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “ஆமாம் சார்... தோலாவிராவில் மகதீரா பட ஷூட்டிங்கிற்கு சென்றபோது, பழமையான ஒரு மரம் ஒன்றைப் பார்த்தேன், அது சிதைந்துபோய் இருந்தது. சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை அந்த மரத்தின் மூலம் விவரிக்கும்படியான ஒரு படத்தை எடுக்கும் ஐடியா தோன்றியது. அதன்பின் பாகிஸ்தானுக்கு சென்றபோது, மொஹஞ்சதாரோவுக்கு செல்ல மிகவும் முயற்சி செய்தேன். துரதிர்ஷ்டவசமாக, அனுமதி மறுக்கப்பட்டது” என கண்ணீர் சிந்தும் எமோஜி உடன் பதிவிட்டுள்ளார் ராஜமவுலி.

இயக்குனர் ராஜமவுலி கடந்த 2018-ம் ஆண்டு காராச்சியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தார். அந்த சமயத்தில் அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றிப்பார்த்து அங்கு எடுத்த புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பல்வேறு ஆச்சர்யத் தகவல்களையும் ராஜமவுலி பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... முதல்நாளைவிட கம்மி வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகாத ‘பொன்னியின் செல்வன் 2’ 2வது நாள் கலெக்‌ஷன் இவ்ளோதானா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios