Asianet News TamilAsianet News Tamil

’தமிழ் மொழியைக் கற்காமல் போனதற்காக வெட்கித் தலைகுனிகிறேன்’...சொல்றவர் யாருன்னு பாருங்க...

ஐஐடி நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பிரதமர் மோடி, மாணவர்கள் மத்தியில் பேசிய போது தமிழ் குறித்து பேசினார். உலகின் மிகப்பழமையான மொழி தமிழ். தமிழை போற்றுவோம் எனப் பேசினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேசிய போது, ’நான் அமெரிக்கா சென்று வந்திருக்கிறேன். அங்கு நான் பேசும்போது தமிழ்மொழி மிகவும் பழமையான மொழி என்று சொல்லியிருக்கிறேன். அதுதான் அங்குள்ள ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது’என்றும் தெரிவித்தார்.
 

anand mahendra feels very sorry for not learning tamil
Author
Chennai, First Published Sep 30, 2019, 4:02 PM IST

’சிறு வயதில் படித்தது ஊட்டி கான்வெண்டில்தான் என்றாலும் அங்கு முறையாகத் தமிழ் மொழியைக் கற்காமல் போனதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. தற்போது பிரதமர் மோடி ஐ.நா.சபையில் பேசிய பிறகுதான் எனக்கு தமிழின் அருமை தெரிந்தது’என்று தனது ட்விட்டர் பதிவுகளில் வருத்தம் தெரிவித்துள்ளார் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா.anand mahendra feels very sorry for not learning tamil

தமிழ் உணர்வாளர்கள் சிலரின் சீரிய முயற்சிகளால் கீழடி போன்ற சில தடயங்களைக் கொண்டு உலகின் மற்ற அத்தனை மொழிகளும் தமிழின் காலடிக்குக் கீழேதான் என்று நிரூபணமாகிக்கொண்டுவரும் நிலையில், ஐஐடி நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பிரதமர் மோடி, மாணவர்கள் மத்தியில் பேசிய போது தமிழ் குறித்து பேசினார். உலகின் மிகப்பழமையான மொழி தமிழ். தமிழை போற்றுவோம் எனப் பேசினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேசிய போது, ’நான் அமெரிக்கா சென்று வந்திருக்கிறேன். அங்கு நான் பேசும்போது தமிழ்மொழி மிகவும் பழமையான மொழி என்று சொல்லியிருக்கிறேன். அதுதான் அங்குள்ள ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது’என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் மோடியின் பேச்சைக்குறிப்பிட்டு மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த மகேந்திரா ட்வீட் செய்துள்ளார். அதில்,... ஐநாவில் பேசிய மோடி உலகின் பழமையான மொழி என்று தமிழைக் குறிப்பிட்டார். அதுவரையிலும் அதை தெரிந்துகொள்ளாமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்.anand mahendra feels very sorry for not learning tamil

அந்த உண்மை எனக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தமிழ் மொழியின் பெருமையை இந்தியா முழுவதும் நாம் பரப்ப வேண்டும். நான் ஊட்டியில்உள்ள பள்ளியில் படித்தேன். அப்போது நான் தமிழை படித்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, எனது பள்ளித் தோழர்களிடமிருந்து, துஷ்பிரயோகம் செய்யப்பயன்படுத்தும் சில  கெட்ட வார்த்தைகளை மட்டுமே நான் கற்றுக்கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios