நடிகர் அரவிந்த்சாமி ‘வணங்காமுடி’ படத்துக்காக தன்னுடைய உடலை சிக்ஸ் பேக்காக மாற்றியுள்ளார்.

மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் அரவிந்த்சாமி,

அதன்பிறகு பல படங்களில் நடித்து பெண்களின் ஆசை நாயகனாக வலம் வந்தவர்.

ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் தொழில் என்று கவனித்து வந்தவர் ஒரு காலகட்டத்தில் முழு கவனமும் தொழில் பக்கமே திருப்பினார்.

மீண்டும் ‘தனி ஒருவன்’ படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த அரவிந்தசாமி. தற்போது அரவிந்தசாமி கோலிவுட்டில் மீண்டும் பிசியாகிவிட்டார். தற்போது அவர் நடித்துவரும் ‘சதுரங்க வேட்டை 2’ விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் செல்வா இயக்கத்தில் ‘வணங்காமுடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நேர்மையான காவல் அதிகாரியாக நடிக்கும் இவர் இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக தனது உடலை சிக்ஸ் பேக்காக வைக்க முடிவு செய்துள்ளாராம்.

இவரது வயது 47. இந்த வயதில் சிக்ஸ்பேக் கொண்டு வருவது கடினம் என்றாலும் விடா முயற்சியால் தன் உடலை வருத்திக் கொண்டு விரைவில் சிக்ஸ்பேக் உடலுடன் அட்டகாசமான வலம் வருவார்.