amy jackson support peta

நடிகை எமி ஜாக்சன், மிக குறுகிய காலத்திலேயே விஜய், விக்ரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்து விட்டார்.

தற்போது இவர் இரண்டாவது முறையாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்,' 2 . 0 ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது மீண்டும் பீட்டா சர்ச்சையில் சிக்கியுள்ளார் எமி.

ஏற்கனவே, இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம், ஒட்டு மொத தமிழர்களுக்கும் எதிரியாக மாறினார். 

இந்நிலையில் மீண்டும் பீட்டாவிற்கு ஆதரவாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, தமிழர்களுக்கு எதிரியாக மாறியுள்ளார். இதனால் கண்டிப்பாக எந்திரன் படம் வெளியக்கூடாது என்று பீட்டாவை எதிர்க்கும் தமிழர்கள் போர்க்கொடி தூக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.