இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசபட்டினம்' படத்திற்காக லண்டனில் இருந்து கோலிவுட்டிற்கு இறக்குமதியானவர், நடிகை எமி. முதல் படத்திலேயே அழகிய பொம்மை போல் தோன்றி, தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

இந்த படத்தை தொடர்ந்து, பாலிவுட் திரையுலகிலும் கவனம் செலுத்தினார். அதே போல் தமிழிலும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

அந்த வகையில் இதுவரை, விக்ரமுக்கு ஜோடியாக ஐ, தனுஷுக்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி, விஜய்யுடன் 'தேறி', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் '2 .0 ' ஆகிய படங்களில் நடித்தார். 

ஹாலிவுட்டில் 'சூப்பர் கேர்ள்' என்கிற வெப் சீரிஸில் நடிக்க துவங்கியதில் இருந்து, திரைப்படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டார். அதே நேரத்தில் தன்னுடைய திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி பேரதிர்ச்சி கொடுத்தார். விரைவில் எமிக்கும் அவருடைய காதலர் ஜார்ஜிக்கும் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த எமி, அடிக்கடி குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் புகைப்படம், போன்றவற்றை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் குழந்தையை அமர வைத்து இவர் எடுத்துள்ள போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Andreas Jax Panayiotou ❤️ Just a little something to brighten up your Monday morning!

A post shared by Amy Jackson (@iamamyjackson) on Sep 29, 2019 at 11:23pm PDT

 

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் இது உண்மையிலேயே எமியின் குழந்தையா...? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவ்வளவு கியூட்டாக போஸ் கொடுக்க வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த புகைப்படம். எமி இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிடுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.