தமிழ் சினிமாவில், இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன். இந்த படத்தை தொடர்ந்து, முன்னணி நடிகர்களான,  விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் மிக குறுகிய காலத்தில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், நடிகர்கள் படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் இவர் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.  கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும் இவருடைய காதலர் ஜார்ஜுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் இவர்களுடைய திருமணம் குழந்தை பிறந்த பின், அடுத்த வருடத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

எமி, கர்ப்பமாக இருந்தாலும், அடிக்கடி காதலருடன் ஊர் சுற்றுவது, ஹாலிவுட் சீரிஸ், மற்றும் மாடலிங் என பிஸியாகவே இருக்கிறார். மேலும் அவ்வப்போது, உடல்பயிற்சி செய்யும் புகைப்படத்தையும் வெளியிடுகிறார்.

இந்நிலையில், கர்ப்பகாலத்தில் உடல்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், கர்ப்பம் தரித்திருக்கும் தாய் மார்களுக்கு டிப்ஸ் சில கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே நான் தொடர்ச்சியாக உடல் பயிற்சி செய்து வருகிறேன்.  வைத்திருக்கிறேன். அதேபோல்,  யார் யாருக்கு எந்த விதமான உடல் பயிற்சி பிடிக்குமோ அதை செய்யுங்கள். இது எந்தவகையிலும் தவறு இல்லை. ஆனால் சில பெண்கள் கர்ப்பம் தரித்த பின் உடல்பயிற்சி செய்வதை தவிர்த்து விடுகிறார்கள் அது தான் தவறு. இப்படி நாள் தோறும் உடல் பயிற்சி மேற்கொள்ளுவது மூலம் குழந்தையும் தாயும் புத்துணர்ச்சியோடு இருப்பார்கள் என கூறியுள்ளார்.