நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கூறுகையில் கர்ப்பமாக இருப்பதை தெரியாமல் இருந்தேன் என்றும் 6 வாரங்களுக்கு பின்பு தான் தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'மதராசப்பட்டினம்' திரை படம் மூலம் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். இந்த படத்தை தொடர்ந்து 'வேலையில்லா பட்டதாரி', 'ஐ' , '2.௦' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அவ்வப்போது, கவர்ச்சி உடைகளுடன் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் எமி ஜாக்சன், சமீபத்தில் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதை பார்த்து ஒரு நிமிடம் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏற்கனவே George Panayiotou என்பவருக்கும் எமிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் விரைவில் திருமணமும் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.  

இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ள எமி ஜாக்சன் இது குறித்து கூறுகையில், பல்வேறு நாடுகளை சுற்றி கொண்டேனா இருந்ததால், ஏற்கனவே சோர்வாக இருந்தேன்... அதனால் முதல் ஆறு வாரங்கள் வரை கர்ப்பமாக இருப்பது தெரியவில்லை. 

தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன். எது நடக்கும் என்பது நம் கையில் இல்லை. பிறக்கபோவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என தெரியாது. ஆனால் அந்த குழந்தை தன்னை போலவே உலகம் சுற்றும் படி வளர்ப்பேன் என கூறியுள்ளார்.