நடிகர் விவேக்கின் மரணம் குறித்து அறிந்து வேதனையடைந்ததாக, அமைச்சர் அமித்ஷா மற்றும், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் ட்விட்டர் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர். 

நடிகர் விவேக்கின் மரணம் குறித்து அறிந்து வேதனையடைந்ததாக, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் ட்விட்டர் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு சமூக சீர்திருத்த கருத்துக்களை கலைவாணர் N.S.கிருஷ்ணன் வழியில் எடுத்துச்சொல்லி மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் 'சின்ன கலைவாணர்' என அன்போடு அழைக்கப்பட்டவரும், 'முன்னாள் குடியரசு தலைவர்' டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின மிகப்பெரும் கனவுகளில் ஒன்றான 'பசுமை தமிழகம்' திட்டத்தை நிறைவேற்றும் வகையில்., தான் முக்கிய பொறுப்பு வகித்து வந்த "கிரீன் கலாம் அமைப்பு" மூலம் தமிழகம் முழுதும் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காக வைத்து, செயல்பட்டவர் விவேக்.

இதற்காக இடைவிடாது தொடர்ந்து செயல்பட்டு, கிராமங்கள் , நகரங்கள் , மாநகரங்கள்... உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் எண்ணற்ற இடங்களில், இதுவரை கிட்டத்தட்ட 35 லட்சம் மரக்கன்றுகள் நட்டு ., சிறந்த சமூக செயல்பாட்டாளராகவும், அதைவிட சிறப்பான மனிதநேய பண்பாளராகவும் செயலாற்றி வந்தவர் நடிகர் பத்மஸ்ரீ விவேக்.

எதிர்பாராத விதமாக, நேற்று காலை 11 மணிக்கு மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள SIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4 :30 மணியளவில், விவேக் இறந்ததாக வெளியான தகவல், ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது மரணம் குறித்து அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், தற்போது நடிகர் விவேக் மரணம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் ட்விட்டர் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Scroll to load tweet…

அமைச்சர் அமித்ஷா... தமிழில்" நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றேன். அவரது நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியது. தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்.
 ஓம்சாந்தி" என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அதே போல் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ் சினிமா நடிகர் விவேக் திடீர் மரணம் குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைத்தேன். சமூக கருத்துகள் கொண்ட விஷயங்களை கூட தன்னுடைய டைமிங் காமெடி மூலம், உச்சகத்துடன் திரையில் பதிவு செய்தவர். இவரது குடும்பத்தினருக்கு ஆழ்த்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.