உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவின் கோர பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இதுவரை உலகம் முழுவதும் 13 லட்சத்து 46 ஆயிரத்து 974 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துவிட்டது. நாளுக்கு நாள் ருத்ர தாண்டவம் ஆடி வரும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவை பொறுத்தவரை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க, ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசி தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன. 

ஆனால் மக்கள் ஊரடங்கு குறித்தோ, கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்றின் வீரியம் குறித்தோ முறையான விழிப்புணர்வின்றி வெளியே சுற்றித்திரிகின்றனர். காய்கறி மார்க்கெட், மளிகை கடைகள், மருந்தகங்கள் என எங்கு சென்றாலும் சமூக விலகலை கடைபிடிக்காமல் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். 

இந்நிலையில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதற்கான அவசியம் குறித்து விளக்கும் விதமாக அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மோகன் லால், மம்முட்டி, சிரஞ்சீவி, சிவராஜ் குமார் என இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் சூப்பர் ஸ்டார்கள் மற்றும் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோர் We are one Family என்ற குறும்படத்தில் நடித்துள்ளனர். 

காணாமல் போன அமிதாப் பச்சனின் சன் கிளாஸை தேடி ஒவ்வொரு அறையாக செல்லும் ரன்பீர் கபூர் அங்கு மோகன் லால், ரஜினி, சிரஞ்சீவி, சிவராஜ் குமார் ஆகியோரிடம் விசாரிக்கிறார் அவர்கள் அனைவரும் தங்களது மொழியில் கண்ணாடியை பற்றி பதிலளிக்கின்றனர். இறுதியாக ஆலியா பட் தலையில் இருக்கும் கண்ணாடியை கண்டுபிடிக்கப்பட்டு, அது பிரியங்கா சோப்ரா மூலமாக அமிதாப்பிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: தண்ணியை பார்த்தாலே சன்னி லியோனுக்கு ஏதோ ஆகிடுது... பிகினியில் என்னம்மா போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க...!

இதில் நடித்த அனைவருமே தங்களது வீடுகளில் இருந்த படியே இந்த குறும்படத்தில் ஒன்றாக இருப்பது போல் நடித்துள்ளனர். குறும்படத்தின் இறுதியில் பேசும் அமிதாப் பச்சன், நாங்கள் அனைவரும் வெளியே வராமல் தங்களது வீட்டிற்குள் இருந்த படியே இந்த குறும்படத்தை எடுத்துள்ளோம். அதேபோல் நீங்களும் உங்களுடைய வீட்டிற்குள்ளேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் இந்தியா சினிமாத்துறை ஒரு மிகப்பெரிய குடும்ப போன்றது. இந்த ஊரடங்கு நேரத்தில் கஷ்டப்படும் தினக்கூலி சினிமா தொழிலாளர்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.