பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சனுக்கு ஜூலை 11 ஆம் தேதி, கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர், கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் இவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக தகவல் வெளியிட்ட தொலைக்காட்சியை ட்விட்டரில் வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, அரசு தரப்பிலும், சுகாதார துறை தரப்பிலும், பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், இதற்கு உரிய தடுப்பு மருந்து கண்டு பிடித்ததால் தான், கட்டுப்படுத்த முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பு மருந்து கொண்டுவர முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது.

ஏழை, பணக்காரன் என எந்த பாகும் பாடும் இன்றி தாக்கி வரும்  கொரோனா தொற்றுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பாலிவு திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறித்து நடிகர் அமிதாப் பச்சனே ட்வீட் செய்து அந்த கொரோனா பாதிக்கப்பட்டதை உறுதி செய்தார்.

அதில் “எனக்கு கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த 10 நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.

நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருடைய உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அமிதாப்பச்சனுக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளதாக தகவல் பரவியது.

இந்த தகவலை மறுத்துள்ள அமிதாப்பச்சன், கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக வெளியான தகவல் போலியானது, முற்றிலும் பொய் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த செய்தியை அமிதாப் பச்சன் மறுத்துள்ளது மட்டும் இன்றி அந்த தொலைக்காட்சியை பொறுப்பில்லாத நிறுவனம் என சாடியுள்ளார்.