இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்த பாகிஸ்தான் கும்பல் ஒன்று அவரது புரஃபைல் பக்கத்தில் இம்ரான் கானின் படத்தை வைத்ததோடு, இந்தியாவுக்கு எதிரான சில கருத்துக்களையும் பதிவிட்டனர். அப்பதிவுகள் வலைதளங்களில் வைரலாகின.

இந்தியாவின் நீண்ட நெடுங்கால  சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் அமிதாப் பச்சன். இவர் மத்திய அரசின் விளம்பர தூதராகவும் நியமிக்கப்பட்டார். பல்வேறு பிரபலங்களை போல சமூக வலைத்தளமான ட்விட்டரில் படு ஆக்டிவாக இருப்பவர் அமிதாப்.  சக கலைஞர்களுக்கு வாழ்த்துச்சொல்வது, நாட்டு நடப்புகள் குறித்து தனது கருத்துகளை மனம் திறந்து பகிர்ந்துகொள்வது அமிதாப்பின் அன்றாட வழக்கம்.இந்நிலையில் இவரது ட்விட்டர் பக்கத்தை பாகிஸ்தானை சேர்ந்த டர்கிஷ் ஹேக்கர் குரூப்என்ற கும்பல் ஹேக் செய்தனர்.

நேற்றிரவு இந்த ஹேக் சம்பவம் நடந்தது. அந்த கும்பல் சில நிமிடங்களில் அமிதாப் முகப்பு புகைபடத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் புகைப்படத்தை வைத்தனர். அத்துடன் இந்தியாவிற்கு எதிரான சில கருத்துக்களையும் அமிதாப்பின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இதையடுத்து தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதை அறிந்த அமிதாப், அதனை தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் மீட்டெடுத்தார்.