இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தன்னுடைய மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் சுவேதாவிற்கு சமமாக தன்னுடைய சொத்துக்களை பிரித்துக்கொடுப்பதாக பிரித்துக் கொடுக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கு 2,800 கோடிரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் அமிதாபச்சன் அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய விருப்பத்தை பகிர்ந்து உள்ளார். அப்போது தான் தன்னுடைய சொத்துக்கு மகன் மட்டுமே உரிமை கோரமுடியாது. மகளும் இருக்கிறார். அவருக்கும் சமமாக என்னுடைய சொத்தைப் பிரித்துக் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக அவருடைய சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பதிவையும் செய்துள்ளார்.

நான் இறக்கும் போது எனது சொத்துக்களை மகன் மகளுக்கு சமமாக விட்டு செல்வேன் என தெரிவித்திருந்தார். அடிக்கடி பாலின சமத்துவத்தை பற்றி பேசிவரும் அமிதாபச்சன் தன்னுடைய மகள் மீது அதிக அன்பு கொண்டவர். இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு அதாவது "பெண் குழந்தைகளை காப்போம்.. பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்" என்ற பிரசார இயக்கத்திற்கு அமிதாப் ஆதரவு தெரிவித்து இருந்தார்.

தற்போது பெண் குழந்தைகள் நலனுக்காக ஐநா சபை தூதராகவும் இவர் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னுடைய மகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சொத்தில் பாதி கண்டிப்பாக பிரித்து தருவேன் என கூறியிருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது