திரைப்படத் துறையைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன் போன்றோர் அண்மைக்காலமாக பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ்  வரும் நாமாளுமன்றத் தேர்தலில் பெங்களூருவில் பாஜகவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.  

இந்நிலைய்ல பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி வந்த இயக்குனர் அமீர் செய்தியாளர்களை சந்தித்தார். ஒருமணி நேரத்தில் முடியவேண்டிய ஜாக்டோ-ஜியோ பிரச்சனையை தமிழக அரசு வளர்ப்பதற்கான காரணம் என்ன? ஜாக்டோ-ஜியோவுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட முதமைச்சரோ, துறை அமைச்சர்களோ தயாராக இல்லை என தெரிவித்தார்.

சுதந்திர இந்தியாவில் பல 100 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்திரா காந்தி காலத்தில் இருந்து சொல்ல முடியாத அளவிற்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் எந்த திட்டத்தாலும் மக்களுக்கு பயன் இல்லை.

நாட்டில் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழையாகவே இருக்கிறான். கடந்த முறை ஜெயலலிதா முதலமைச்சராக  இருந்த போதும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதன் மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து எந்த திட்ட அறிவிக்கையும் இல்லை என குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவை வீழ்த்த நினைப்பவர்களுடன் சேர்ந்து பணிபுரிவேன். தமிழ் தேசிய உணர்வு, மாற்றம் தேவை என நினைப்பவர்கள் ஓர் அணியில் இருந்து செயல்பட வேண்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்தார்.