நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, லட்சுமி நடித்த ஓ பேபி வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. இப்டத்தின் வெற்றி விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் கொண்டாடப்பட்டது. 

வெற்றி விழாவுக்கு சமந்தா வெள்ளை நிற உடை அணிந்து வந்து தேவதை போல் ஜொலித்தார். சக்சஸ் மீட்டிற்கு முன்பு நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் தான் தன் இத்தனை நாள் மறைத்த வைத்த டாட்டூ வைகுறிப்பிட்டுள்ளார். சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவின் பெயரை தான் உடலில் டாட்டூ குத்தி உள்ளார்.

ஆனால் அது வில்லங்கமான இடம் என்பதால்அதை இத்தனை நாளாக மறைத்து வைத்து இருந்திருந்தாராம். நேற்றைய போட்டோவில் ஆடை சற்று மேலேறியிருக்க டாட்டூ குத்திய இடம் தெரிந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் ,புருஷன் பெயரை டாட்டூ குத்த வேறு இடமே கிடைக்கவில்லையா? என்று கேட்டு வருகிறார்கள்.

சமந்தாவும், நாகசைதன்யாவும் தங்கள் கைகளில் ஒரே மாதிரி டாட்டூ குத்தியுள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா மார்ஸ் கோடில் ஒரு டாட்டூ குத்தினார். அது அவர்களின் திருமண தேதி என கூறப்பட்டது. அது போலத்தான் தன் உடலில் சமந்தா கணவர் பெயரை டாட்டூ குத்தியுள்ளாராம்.