amalapaul tweet for fans

நடிகை அமலா பால், தன்னுடைய காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு, பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். 

ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய நண்பர்களுடன் வெளிநாடுகளில் சுற்றி திரிகிறார், அப்போது எடுக்கும் போட்டோக்களையும் தன்னுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவருடைய போட்டோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்... அதில் அழகில் மேலும் மெருகேறி, அசப்பில் தீபிகா படுகோனே சாயலில் உள்ளார் அமலாபால் என்று பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் தன்னை பிழைக்க வைத்துள்ளது, தனக்குள் எரியும் நெருப்பு தான் என்று பதிவிட்டுளர் ஆனால் ஏன் இப்படி ஒரு கருத்தை அமலா பால் பதிவிட்டார் என பலரும் குழம்பி வருகினறனர்.