நடிகை அமலாபால் தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தாலும், அவரை பற்றி தொடர்ந்து வதந்திகள் வருவது தொடர்கதையாகியுள்ளது.
நடிகை அமலாபால் தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தாலும், அவரை பற்றி தொடர்ந்து வதந்திகள் வருவது தொடர்கதையாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷாலை காதலிப்பதாக எழுந்த கிசுகிசு, மேனேஜர் பிரதீப் குமாருடன் இவர் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த சர்ச்சை, என இவரை பற்றிய வந்தந்திகள் அடுக்கடுக்காக வந்தாலும் அவை அனைத்திற்கும் பதிலடி கொடுத்து வருகிறார் அமலாபால்.

மேலும் அவ்வப்போது தானாகவே சில கவர்ச்சி புகைப்படங்களை வெளிட்டு வம்பை விலை கொடுத்தும் வாங்குகிறார். அந்த வகையில், சமீபத்தில் கூட வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு கையில் மது பாட்டிலுடன் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் இவரை விமர்சித்தனர்.

இதை தொடர்ந்து தற்போது அமலாபால், புகைபிடிப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க மாட்டேன். ஹாலிவுட் ரசிகையின் கனவு ஒன்று நிறைவேறியுள்ளது. அனைத்து நட்சத்திரங்களுக்கும் புகைப்பிடிக்கும் புகைப்படம் ஒன்றாவது இருக்கும், இது என்னுடையது' என்று பதிவு செய்துள்ளார்.
இவர் புகைப்பிடிக்கும் படத்தை வெளியிட்டு அதற்கு விளக்கம் கொடுத்திருந்தாலும், போட்டோவை பார்த்த நொடியே அமலாபாலின் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்.
