இயக்குனர் ஏ.ஏல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால். திடீர் என ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தார். விவாகரத்து பெற்ற பின் திரைப்படங்கள் நடிப்பதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினர்.

 

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான 'ராட்ச்சன்' திரைப்படம் வசூல் ரீதியாக மற்றும் இன்றி பலரால் பாராட்டப்பட்ட படமாக அமைந்தது. இந்த படத்தில் நடித்த போது நடிகர் விஷ்ணு விஷாலுக்கும், அமலாபாலுக்கு நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பை தற்போது காதலாக மாறி விட்டதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் உள்ளதாகவும் திரையுலக வட்டாரத்தில் ஒரு பேச்சு பரவலாக அடிப்பட்டு வருகிறது.

மேலும் இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, நடிகர் விஷ்ணு விஷால், கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து கரம் பிடித்த மனைவி ரஜினியை விவாகரத்து செய்து விட்டதாக இந்த மாதம் 13 ஆம் தேதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் இவர்கள் இருவரும் மறுமணம் செய்து கொள்ள உள்ளதாக பரவி வரும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சில ரசிகர்கள் அமலா பாலுக்காக தான் விஷ்ணு விஷால் மனைவியை விவாகரத்து செய்தாரா என்பது போன்ற கேள்விகளையும் முன் வைத்து வருகிறார்கள். உண்மையில் இவர்கள் நட்பாக பழகி வருவது தவறுதலாக பார்க்கப்பட்டதா... எது உண்மை எது போது பொய் என இவர்கள் வாய் திறந்தால் மட்டுமே வெளிவரும்.