தன்மீது அபாண்டமாக பாலியல் குற்றம் சாட்டியுள்ள லீனா மீது வழக்குப் போட்டுள்ள சுசி கணேசன் ஒன்றும் யோக்கியமானவர் அல்ல. அவரது படத்தில் நடித்தவள் என்கிற முறையில் சொல்கிறேன். பெண்கள் விஷயத்தில் மிகவும் தவறானவர் சுசி கணேசன்’ என்கிறார் அவரது ‘திருட்டுப்பயலே2’ படத்தின் நாயகி அமலாபால்.

இயக்குநர் சுசிகணேசன் மீதான லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத்தெரியாத அந்த மனிதரிடம் உதவி இயக்குநரான லீனா மணிமேகலை என்ன பாடுபட்டிருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.

நான் அவர் இயக்கிய ‘திருட்டுப்பயலே2’ படத்தின் கதாநாயகியாக இருந்தாலும், எப்போதும் இரட்டை அர்த்தம் தொனிக்க பேசும் அவரது பேச்சுக்களாலும், முகம் தெரியாத யாரிடமோ அவர் பேசிய பேச்சுக்களை வைத்து அவர் எவ்வளவு தவறானவர் என்பதைப் புரிந்துகொண்டேன். அதுவுமின்றி படப்பிடிப்புத்தளங்களில் தேவையில்லாமல் என்னை உரசியபடியே நின்றுகொண்டிருப்பார். 

எனவே அவரது சித்திரவதைகளை அனுபவித்தவள் என்கிறமுறையில் இந்த நேரத்தில் லீனா மணிமேகலையை நான் ஆதரிக்கிறேன்’ என கூறி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் அமலா பால் இப்படி ஒரு தகவலை வெளியிட்ட பின்பு... அவருக்கு  காத்திருந்தது அதிர்ச்சி... "சரியாக 2 : 45 மணிக்கு  சுசி கணேசன் மற்றும் அவருடைய மனைவியிடம் இருந்து ஒரு போன் கால் வந்துள்ளது. அதனை அமலா எடுத்து பேசி, தனக்கு சுசி கணேசனால் நடந்த கொடுமை பற்றி பேச முயன்றுள்ளார். அப்போது அவருடைய மனைவி சிரித்து விட்டு... சுசி கணேசன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன் படுத்தி அவரை தீட்டியுள்ளனர்".

இது குறித்து உடனடியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அமலா பால்... இவர்களுடைய மிரட்டல்களுக்கு தான் பயப்பட போவது இல்லை என்பது போல் கூறியுள்ளார்.