am too bad gayatri rahuram tweet
கோலிவுட் திரையுலகில், நடிகையாகவும் நடன இயக்குனராகவும் அனைவராலும் அறியப்பட்டவர் காயத்ரி ரகுராம். இவர் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார்.
அதில் அனைவருடைய மனதையும் வென்ற ஓவியாவை இவர் திட்டிக் கொண்டே இருந்ததால், இவரை பலருக்கும் பிடிக்காமல் போனது. மேலும் இவர் போட்டியாளர்களிடையே நடந்துக்கொண்ட விதமும் பலருக்கு இவர் மேல் வெறுப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும், அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தி வருகிறார் காயத்ரி ரகுராம்.
அது போல் தற்போது அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது 'நான் இன்னும் மோசமானவள்... என்னிடம் யார் எதை வெளிப்படுத்துகின்றனரோ.. அதைத் தான் நானும் காட்டுவேன் என அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.
இவர் திடீர் என இப்படி ஒரு ட்விட் ஏன் போட்டார் என அவரே சொல்லும் வரை காத்திருப்போம்...
