தமிழக அரசியல் சில மாதங்களாவே பெரும் ஆட்டம் கண்டுள்ளது, அதற்கு முக்கியக்காரணம் நிலை இல்லாமல் இருக்கும் அரசியல் தலைவர்கள் என்று கூட சொல்லலாம்.
இந்நிலையில் அரசியலில் ஏற்படும் மாற்றங்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பிரபல வானிலை தொகுப்பாளரும், செய்தியாளருமான மோனிகா சமூக வலைத்தளம் மூலம் எடுத்து கூறினார்.
அவர் கருத்துக்கள் பலவும் ஆளும் கட்சிக்கு எதிராக அமைந்தது, இது குறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் மக்கள் எதை விருப்புகின்றனர், எதனை எதிர்க்கின்றனர் என கூறினேன்.
அதே போல் தோழி என்கிற தகுதிக்காகவோ, உறவினர் என்கிற தகுதியில் அடிப்படியிலோ யாருக்கும் முதலமைச்சர் பதவியை கொடுத்துவிட முடியாது என்பது என்னுடைய கருத்து மட்டும் அல்ல ஒட்டு மொத்த மக்களின் கருத்தும் அதுவாகவே இருந்தது...
மேலும் இதுபோன்ற ஒரு சில விவாதங்களை தான் மேற்கொண்டதால் நான் தற்காலிகமாகவோ, அல்லது நிரந்தரமாகவோ வேலையை விட்டு நீக்க பட்டேன், தன்னை வேலையை விட்டு நீங்கியதால் தற்போது வரை நான் மார் தட்டி பெருமை படுகிறேன் என மோனிகா கூறியுள்ளார் .
