தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம், 'மாஸ்டர்'. இந்த திரைப்படம் ஏப்ரில் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும், தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டாவது 'மாஸ்டர்' படம் வெளியாகுமா என அவரது ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல், ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த பாடலுக்கு ஏற்கனவே, பலங்கள் பலர் தங்களுடைய வர்ஷனில் நடன அசைவு அமைத்து, டான்ஸ் ஆடி தங்களுடைய திறமையை வெளிக்காட்டி வரும் நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர்கள் இந்த பாடலுக்கு நடனம் ஆடுவது போல் ரசிகர் உருவாக்கியுள்ள ஒரு வீடியோ, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தெலுங்கு சினிமாவில் நடனத்தில் பட்டையை கிளப்பும், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்,மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோரின் நடன அசைவுகள் இந்த பாடலில் சேர்க்கப்பட்டுள்ளது. பாஸ்ட் பீட்டில் இந்த மூன்று நடிகர்களும் நடனமாடிய தொகுப்பையே 'வாத்தி கம்மிங்' எனும் ஒரே பாடலில் கண் முன் நிறுத்தியுள்ளார் இந்த வீடியோவை கிரியேட் செய்த ரசிகர். குறிப்பாக கடைசி 25 நொடியை மிஸ் பண்ணிடாதீங்க பாஸ் சும்மா மரண மாஸ் ஸ்டெப்ஸ் காத்துக்கொண்டிருக்கிறது..
அந்த வீடியோ இதோ...
Scroll to load tweet…
