நேற்று முன் தினம் திடீர் மாரடைப்பு செய்திகள் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த இயக்குநர் மணிரத்னம் இன்று காலை வழக்கம்போல் அலுவலகத்துக்கு ஆஜராகி ஸ்கிர்ப்ட் வேலைகளைப் பார்க்கத்துவங்கிவிட்டார் என்று மெட்ராஸ் டாக்கிஸ் வட்டாரங்கள் உற்சாகமாகத் தெரிவித்தன.

‘பொன்னியின் செல்வன்’ ஸ்க்ரிப்ட் வேலைகள்ன் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கு நேற்று முன் தினம் இரவு திடீரென்று மறுபடியும் ஹார்ட் அட்டாக் என்ற செய்திகள் காட்டுத்தீ போல பரவின. அதை மணிரத்னம் வட்டாரம் கடுமையாக மறுத்து அசிடிட்டி தொடர்பான வயிற்று ஒவ்வாமைக்காக மட்டுமே அவர் அப்பல்லோவுக்கு செக் அப் சென்றிருப்பதாக மறுப்புத் தெரிவித்தனர். செக் அப் முடிந்த சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய செய்திகளும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் தனது மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்து வந்த மணிரத்னம் தனது அடுத்த கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டதாகவும், விரைவில் இப்படம் குறித்த அப்டேட்டை வெளியிடுவார் என்றும் அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.