பிக்பாஸ் நிகழ்ச்சி 70வது நாட்களை கடந்து விட்ட போதிலும், இதுவரை ஒருவர் கூட ஓவியா அளவிற்கோ அல்லது பரணி அளவிற்கோ ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வில்லை. இதற்கு முக்கிய காரணம், முதல் சீசன் போட்டியாளர்களை பார்த்து, தங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வந்து விட கூடாது என அனைத்து போட்டியாளர்களும் எதார்த்தமாக விளையாடாமல், நல்லவர்கள் போல் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்றைய தினம், சில மோசமான செய்கைகளால் மகத் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டர் இதனால் பிக்பாஸ் வீடே சோகத்தில் மூழ்கியது.  அதிலும் நடிகை யாஷிகா மகத்துக்காக கொஞ்சம் அதிகமாகவே பீல் பண்ணினார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய புரோமோவில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் தேம்பி தேம்பி அழுகின்றனர். இதுக்கு காரணம் அவரவர் வீட்டில் இருந்து அனைத்து போட்டியாளர்களுக்கும் வந்திருக்கும் கடிதம். 

எடுத்ததுமே யாஷிகா தேம்பி தேம்பி அழுகிறார். இது பார்க்கும் ரசிகர்களுக்கே மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அடுத்ததாக நடிகை ரித்விகா... அவருடைய வீட்டில் இருந்து வந்துள்ள கடிதத்தை படிக்கிறார். அதில் ரித்விகா இல்லாமல் வீடு கலை இழந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து நடிகர் சென்றாயன், தன்னுடைய மனைவி அனுப்பியுள்ள கடிதத்தை படித்து விட்டு, எந்த குழம்பு நீ வைத்தாலும் இது சரி இல்லை அது சரி இல்லை என கூறியதாக பீல் செய்து அழுகிறார். யாஷிகா அவருடைய அம்மாவை நினைத்து அழுது ஒரு நாள் கூட உங்க கையால் சாப்பாடு ஊட்டிகாமல் இருந்தது இல்லை என சத்தம் போட்டு அழுகிறார். அதே போல் ஐஸ்வர்யாவும், மும்தாஜும் தங்களுடைய வீட்டில் இருந்து வந்த கடிதத்தை படித்து விட்டு அழுகிறார்கள். இது பார்ப்பவர்கள் நெஞ்சை உருக வைத்துள்ளது.