'மூடர் கூடம்' படத்தில், இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் நவீன்.  தற்போது 'அலாவுதீன் அற்புத கேமரா' என்கிற படத்தை நடித்து இயக்கியுள்ளார்.

நடிகை ஆனந்தி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை உலகில் முதல் 4K HDR தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.  

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலரை, பிரபல இயக்குனர், ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த படம் காதல், த்ரில், சஸ்பென்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ளது. நவீன் கையில் இருக்கும் அற்புத கேமராவால் நடக்கும், நல்ல விஷயங்களையும், அதனால் வரும் ஆபத்துக்களையும் விறுவிறுப்பாக காட்சி படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.

இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். பாட்ஷா ஒளிப்பதிவில், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.


இந்த படத்தின் ட்ரைலர் இதோ