பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள 2 . 0 படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு, தல அஜித் , தமன்னா, நாசர், சந்தானம் போன்ற பலர் நடித்து வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற படமான வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே இந்த திரைப்படம் 'கட்டமராயுடு’ என்ற தலைப்பில் தெலுங்கில்  ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு ரீமேக்கில் பவண் கல்யாண், சுருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யவுள்ளனர்.

 பாலிவுட் இயக்குநர் பர்காத் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு `லேண்ட் ஆஃப் லுங்கி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சாஜித் நாடியாவாலா இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.