'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் ஹிட் மூலம் மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் உற்சாகம் அடைந்துள்ளார். அதே சுறுசுறுப்பில் தற்போது ‛ஹீரோ' படத்திலும் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், சிவாவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் அறிமுகமாகிறார்.

மேலும், இயக்குனர் பாலா இயக்கிய, நாச்சியார் படத்தில்,  ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த, இவனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மும்புரமாக நடந்து வருகிறது. இதை அறிந்த பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான அகில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.

கல்யாணி ப்ரியதர்ஷன் ஏற்கனவே, தெலுங்கியில் அகிலுடன் நடித்துள்ளதால், அவர் மூலம் 'ஹீரோ' படக்குழுவை, தொடர்புகொண்டு விருந்து கொடுத்து அகில் கவுரவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த சில புகைப்படங்களை அகில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.